ஜெயங்கொண்டத்தில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் இறப்பு
அரியலூர், 18 பிப்ரவரி (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள உய்யக்கொண்டான் ஏரி பின்புறம் மலங்கன் குடியிருப்பு வயல்வெளி பகுதியில், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ஒரு இளைஞர் மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர். அவரது உடல் மற
Death


அரியலூர், 18 பிப்ரவரி (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம்

ஜெயங்கொண்டம் அருகிலுள்ள உய்யக்கொண்டான் ஏரி பின்புறம் மலங்கன் குடியிருப்பு வயல்வெளி பகுதியில், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ஒரு இளைஞர் மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர்.

அவரது உடல் மற்றும் முகப்பகுதிகளில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து, அவர் மீட்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், அவர் யார் என்பது குறித்த அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அவர் எதற்காக அந்த பகுதியில் வந்தார், எவ்வாறு காயமடைந்தார், இது விபத்தா அல்லது தாக்குதலா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

உடலில் காணப்பட்ட காயங்களின் தன்மை குறித்து மருத்துவ அறிக்கையை எதிர்பார்த்து போலீசார் மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

அருகிலுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பதையும், அங்கு வேலை பார்த்தவர்கள் அல்லது அப்பகுதியில் சுற்றித்திரிந்தவர்கள் குறித்து தகவல் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் உண்மையில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதையும், அவரிடம் இருந்த பொருட்கள் மூலம் அடையாளம் காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம மரணம் தொடர்பான உண்மை வெளிவர போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN