பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி மோசடி - கூட்டுறவு சங்க செயலாளரை சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பம்புதோட்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் மோ.வன்னஞ்சூர், சிறுவங்கூர், காட்டுக்கொட்ட
Suspended


கள்ளக்குறிச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பம்புதோட்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் மோ.வன்னஞ்சூர், சிறுவங்கூர், காட்டுக்கொட்டாய், சடையம்பட்டு உள்ளிட்ட 6 கிளைகளில் ஆவின் சொசைட்டி செயல்பட்டு வருகிறது.

இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தினசரி 1500 முதல் 2000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுமார் 50 லட்ச ரூபாய் சங்கத்தில் லாபத் தொகை இருப்பில் இருந்துள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே பால் கொள்முதல் செய்த வகையில் லாபத் தொகையாக 50 லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக கதிரவன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் பால் சொசைட்டியில் லாபத் தொகையை முறைகேடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் மனு அளித்திருந்த நிலையில் புகார் மனுவின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக துணை பதிவாளர் கலா சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆவணங்களை சில தினங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்த போது சுமார் ஒரு கோடி அளவில் முறைகேடாக பணம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து முதல் கட்டமாக அந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் கதிரவனை துணை பதிவாளர் (பால்வளம்) கலா அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த முறைகேடு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் இந்த முறைகேட்டில் அதிகாரிகள் யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Hindusthan Samachar / ANANDHAN