Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை, மலுமிச்சம்பட்டி அருகே இயங்கி வரும் அபிராமி நர்சிங் கல்லூரியில் தங்கி பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்லூரியில் வழங்கப்படும் தினசரி உணவில் அடிக்கடி புழுக்களும், பூச்சிகளும் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது,
இதைப்பற்றி யாரிடமும் வாய் திறக்கக்கூடாது என மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மிரட்டலால் மாணவிகள் அச்சத்தில் அடைந்து உள்ளனர்.
இந்தச் சூழலில், சுகாதாரமற்ற உணவை உட்கொண்ட ஒரு சில மாணவிகளுக்குத் திடீரென கடும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்ந்து நடப்பதால் மாணவிகள் உடல்நிலை அடிக்கடி மோசம் அடைவதற்குக் காரணமான இந்த அவல நிலையை மாணவிகள், தரமற்ற உணவை வழங்கும் விடுதி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J