லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நெல் மூட்டைகள் தேக்கம்
திருவாரூர், 18 பிப்ரவரி (ஹி.ச.) திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 977 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் அறுவடை எந்திரங்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூர்
நெல் முட்டைகள்


திருவாரூர், 18 பிப்ரவரி (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 977 ஏக்கர் பரப்பளவில் சம்பா

மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் அறுவடை எந்திரங்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் திருவாரூர்

மாவட்டத்தில் 523 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய்பட்டு வருகிறது

ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் மெ.டன்னுக்கு மேல் நெல் கொள்முதல்

செய்யப்பட்டது.

அதில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் மெ.டன் லாரிகள் மூலமாக ஏற்றிச்

செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லாரி தகுதி சான்று புதுப்பித்தலுக்கான கட்டணம் 750 ரூபாயில்

இருந்து 20 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு அதிகபட்சமாக 28,250 வரை

உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16 ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து

வருகிறது.

உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், மாநில அளவிலான வேலை நிறுத்த போராட்டம் வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கும் என

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ்

தெரிவித்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக 3000 லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக

இயக்கப்படாததால் திருவாரூர் மாவட்டத்தில் நுகர்வோர் வாணிப கழகத்தின் மூலம்

ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்த லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால்

நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்படாமல்

உள்ளது.

தற்போது 523 நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 லட்சம் நெல் மூட்டைகள்

தேக்கமடைந்துள்ளது.

நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்படாத கரணத்தினால் கொள்முதல்

பணிகளில் தேக்கம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ள காரணத்தினால் மற்ற

விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam