ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையம் திறப்பு
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை மருத்துவக் கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்த
மா.சுப்பிரமணியன்


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை மருத்துவக் கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான

அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள்

பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் பேசும் போது கூறியதாவது;

இந்தியாவிலேயே புற்று நோய் ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வர இருப்பதாகவும்,

உலகிலயே முதல் முறையாக 14 வயதுடைய இளம் பெண்களுக்கு HPV துடுப்பூசி போடுகின்ற

திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 14

க்கு உட்பட பெண்களுக்கு விலையில்லா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி இருப்பதாவும்,

தற்போது திறக்கப்பட்டு உள்ள புற்றுநோய் மருத்துவமனை இந்தியாவிலேயே

தாம்பரத்தில் இருப்பதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரும்பிய உணவும், மகிழ்ச்சியான மனநிறைவு ஏற்படுத்த படும், அதே நேரத்தில் நூலகம் தானம்

செய்வதற்கு அருகில் ஒதுக்கி தரப்படும் என்றும், தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத ஆறு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கை

எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam