மு க அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் இணைந்தார்
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை பசுமைவழிசாலையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் கீழ்மட்ட தொண்டர்களை அடிமைப்போல நடத்தப்படுவதாகவும், வரும் தேர்தலில்
M


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை பசுமைவழிசாலையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திமுகவில் கீழ்மட்ட தொண்டர்களை அடிமைப்போல நடத்தப்படுவதாகவும், வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக உயிரை கொடுத்து உழைப்பேன் என அதிமுகவில் இணைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர் மன்னன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளோம்.

எனக்கு அதிமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற அனுமதி அளித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகம்..அதை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

வரும் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதற்காக உயிரை கொடுத்து உழைப்போம்

மதுரையில் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்து திமுக கீழ்மட்ட தொண்டர்களை அடிமை போல நடத்துகிறார்கள். இந்த அடிமை தனத்திற்கு முடிவு கட்டுவோம்.

எங்களை வாழ்த்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

கருணாநிதி காலத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.

மீண்டும் மக்கள்.பணியாற்ற கட்சியில் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தும், சிலர் அதிகார மமதையில் அதனை ஏற்கவில்லை.

அந்த மமதை என்ன ஆக போகிறது என வரும் தேர்தலில் தெரியவரும்.

என்னை போல இன்னும் பலர் அதிமுகவில் இணைய உள்ளார்கள். திமுகவில் பாடம் புகட்டுவார்கள். என்று தெரிவித்தார்

அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,

எனக்கும் மன்னனுக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை.

கொள்கை ரீதியான மோதல் தான் இருந்தது.

திமுகவுக்கு மன்னன் ஆற்றிய உழைப்பு வைத்து தான் கருணாநிதி அவரை துணை மேயர் ஆக்கினார்.

உட்கட்சி பிரச்சனை காரணமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இன்று அதிமுகவில் இணைந்திருப்பது மதுரை மன்னனே இணைந்தது போல உள்ளது.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை போல மன்னன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பலகோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மதுரை மேயர் நீக்கப்பட்டுள்ளார்.

சில மண்டலக்குழு தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது வரை அவர்களுக்கு பதில் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை இதனால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

Hindusthan Samachar / Durai.J