Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச)
தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கள் என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பித்துரை, ஜி.கே. வாசன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் இந்த 6 இடங்கள் உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b