கூகுள் நிறுவன அதிபர் சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு!
புதுடெல்லி, 18 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியாவின் அபார வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் அதீத தாக்கம் குறித்த பிரம்மாண்ட மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பியுள்ள கூகுள் நிறுவனத்தின் அதிபரான சுந்தர் பிச்சை இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்
இன்று கூகுள் நிறுவனத்தின் அதிபரான சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு!


புதுடெல்லி, 18 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியாவின் அபார வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் அதீத தாக்கம் குறித்த பிரம்மாண்ட மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பியுள்ள கூகுள் நிறுவனத்தின் அதிபரான சுந்தர் பிச்சை இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

மேலும் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் அவர் தனது கருத்துக்களை வழங்கவுள்ளார்.

இந்திய தேசத்தின் ஏற்பாட்டில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெற உள்ளது.

தெற்குலகில் முதன்முறையாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், நிறுவனர்கள் மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், தொழில்துறை ஜாம்பவான்களையும் தன் வசமாக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 110-க்கும் அதிகமான நாடுகள், 30 பன்னாட்டு நிறுவனங்கள், கிட்டத்தட்ட 45 அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தெற்குலகில் முதன்முறையாக இந்தியாவால் நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, அனைவருக்கும் நலம், அனைவருக்கும் ஆனந்தம் என்ற மனிதாபிமான உணர்வை தேசிய தொலைநோக்குப் பார்வையுடனும், நாட்டின் தொன்மையான தத்துவத்தை பிரதிபலிக்கும் ஏஐ-யின் உலகளாவிய கொள்கையுடனும் இணைந்த மாற்றும் திறனை எடுத்துக்காட்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ஏஐ உச்சிமாநாடு, நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்கள் குறித்த உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய ஒரு சர்வதேச முயற்சியின் அங்கமாகும்.

இந்த உச்சி மாநாடு 2026, இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கம், மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் என்ற மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் கட்டமைக்கப்படும் அறிவு மற்றும் தரவுகளை ஏஐ அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஆகவே, ஏஐ-யின் நன்மைகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

இதற்கிடையில், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பிரத்தியேக நேர்காணலில்,

ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அந்தத் துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார்.

இந்தியாவின் ஐடி துறை, நமது சேவைகள் ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருப்பதுடன் பொருளாதார உயர்வின் முக்கிய காரணியாகவும் திகழ்கிறது.

ஏஐ இந்தத் துறைக்கு ஒரு பெரிய வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது. இந்தியாவின் ஐடி துறை 2030-க்குள் சுமார் 36 லட்சம் கோடியை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் கூறுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM