Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் அறிக்கை குழு எல்லோரும் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திக்க போகிறோம். அவர்களின் கோரிக்கை என்ன உண்மையாகவே அவர்களிடம் என்ன கோரிக்கை இருக்கிறது நேரடியாக அதை சென்று பார்த்து அவர்களோடு கலந்துரையாடி கோரிக்கையை நாங்கள் தேர்தல் அறிக்கையில் சமர்ப்பிக்க இருக்கிறோம்.
விவசாயிகளுக்கு உண்மையாக நேர்மையாக என்ன வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு போல் பச்சைத் துண்டறிந்து கொண்டு துண்டு போடும் பட்ஜெட்டை போடுபவர்கள் நாங்கள் அல்ல.
கூட்டணி கட்சிகளில் நீங்கள் விவசாயிகளுக்கு ஒன்றும் செய்ய தேவையில்லை சும்மா நடிக்க வேண்டாம் நாங்கள் போட்டு நடிக்க மாட்டோம் என்று கூட்டணி கட்சிகள் முடிவு செய்துவிட்டார்கள்.
விவசாயிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3100 ரூபாய் கேட்டது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் கேட்டது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கடன் தள்ளுபடி பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
விவசாயிகள் நெடுங்காலமாக வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லை என்று சொல்கிறார்கள். பாராட்டு விழா தான் நடந்தது எப்படி ஒரு கூட்டத்தை வைத்து வெளியில் பாராட்டு விழா நடத்துவதற்கு பதில் உள்ளே ஒரு கூட்டத்தை வைத்து முதுகை தட்டிக் கொண்டார்கள் தவிர நிச்சயம் தமிழகம் எந்த விதத்திலும் பயன் அடையவில்லை.
எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை சொல்கிறார்கள், மிக மிக மோசமான நிதி மேலாண்மையை தமிழக அரசு பெற்றுள்ளது. மத்திய அரசின் நிதி பகிர்வால் அல்ல மோசமான நிதி மேலாண்மை தமிழகத்தில் இருக்கிறது.
நெடுங்கால அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் என்பது மிகப் பெரிய வேறுபாடு. இதில் தமிழகத்தின் பல விஷயங்களை இந்தியா முழுவதும் பின்பற்றுகிறது என்று சொல்கிறார்கள் பல மாநிலங்களில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் கடனுடன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளீர்கள். அதனால் தமிழ்நாடு அரசு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு நேற்று அவர்கள் வாசித்த இடைக்கால பட்ஜெட் பிராமண பத்திரம் தான் வெட்ட வெளிச்சமாக மக்களுக்கானவர்கள் அல்ல என்பதை தெரிவித்திருக்கிறார்கள் இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.
தமிழகத்தில் செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாகத்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது தொடர்பான கேள்விக்கு,
ஒரு மாநிலத்திற்கு என்று தனியாக நிதி கொள்கை கிடையாது. ஒரு நிதிக் கொள்கை வைத்துக் கொண்டு அந்த நிதி கொள்கை மூலமாகத்தான் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மாநிலத்தின் நிதி பகிர்வு 41% என்றால் எல்லா மாநிலங்களுக்கும் அதுதான். ஜி எஸ் டி 14% என்றால் எல்லா மாநிலங்களுக்கும் அது தான்.
தமிழ்நாட்டிற்கு என்று தனியான நிதி பகிர்வு கிடையாது அப்படி என்றால் அவர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள்.
உதாரணத்திற்கு எஸ் ஐ ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களை எடுத்து விடுகிறார்கள் என்று சொன்னார்கள் இன்று குஜராத்தில் 77 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டுள்ளார்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் தான் எல்லா நிறுவனங்களும் அமைப்புகளும் உள்ளது.
நீங்கள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறீர்கள் என்பதுதான் என் கருத்து.
இந்த இடைக்கால பட்ஜெட் மத்திய அரசிடம் குறை சொல்ல எந்த அவசியமும் இல்லை மத்திய அரசு கட்டமைப்புக்கு மட்டும் 11 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறது. தமிழகம் கட்டமைப்பிற்கு செலவழித்திருப்பது மிக மிகக் குறைவு.
கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. டிரம்பை அடக்கினீர்களா பாகிஸ்தானை இறக்கினீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு மாணிக் தாகூரை அடக்க முடியவில்லை இதுதான் இன்று நடந்து கொண்டுள்ளது.
மாணிக்கம் தாகூர் மத்திய தலைமையிடம் ஆலோசனை செய்து தான் பேசுகிறேன் என்கிறார். கூட்டணிக்கு உங்களால் குழு அமைக்க முடியவில்லை. ஆனால் பல நாடுகளில் குழு அமைத்து இன்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
அதிமுக கூட்டணி எலியும் தவளையும் போல் ஒன்று சேரவே சேராது ஒளிந்திருக்கும் எலியையும் தவளையும் இரையாக்கும் மருந்து பாஜக என தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது குறித்த கேள்விக்கு,
சிரித்துடன் தமிழச்சி தங்கபாண்டியன் திடீரென்று வந்து தென் சென்னையில் எந்த தெருக்கலுக்கு எப்படி பணியாற்றினார் என்று தெரியாது திடீரென்று கருத்து தெரிவித்துள்ளார்.
பருந்து போல் கிடையாது பறந்து வந்து எல்லோருக்கும் உதவி செய்வதுதான் எங்கள் கூட்டணி.
நாங்கள் எல்லோரும் பாரத பிரதமர் எல்லோரும் கையை பிடித்து உயர்த்தி நிச்சயமாக பரந்த மனப்பான்மையுடன் பருந்து மனப்பான்மை இல்லை. பரந்த மனப்பான்மையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். நீங்கள் தான் கழுகு மாதிரி உட்கார்ந்து கொண்டு யாரை விழுங்கலாம் என்று இருக்கிறீர்கள்.
டெல்லியில் இருந்து தான் எங்கள் கூட்டணி அமையும் என்று சொல்கிறார்கள் யார் டெல்லிக்கு அடிமை திமுக தான் டெல்லிக்கு அடிமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam