திருமணத்திற்காக வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி - பீரோவை உடைத்து கொள்ளை
கள்ளக்குறிச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தன்டமருதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா(45) .இவரது கணவர் சக்திவேல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வனிதாவிற்கு இரண்டு மகள்கள் ஒரு
Thirukovilur Police station


கள்ளக்குறிச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தன்டமருதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா(45) .இவரது கணவர் சக்திவேல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வனிதாவிற்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருந்து வருகின்றனர். நிலையில் முதல் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக 5 சவரன் தங்க நகைகள், அரை கிலோ அளவிற்கு வெள்ளி பொருட்கள் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திருக்கோவிலூரில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

திருவிழாவிற்கு தனது குடும்பத்துடன் வந்த வனிதா அவரது உறவினர் வீட்டில் திருக்கோவிலூரில் தங்கி விட்டு இன்று காலை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். வீட்டில் மேல் பகுதியில் இருந்த ஓடுகள் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று இருப்பதும், பின்னர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, 1/2 கிலோ அளவுள்ள வெள்ளி பொருட்கள் 50,000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மகளுக்கு சேர்த்து வைத்த நகை கொள்ளை போனதை கண்டு கதறிய அனிதாவிற்கு மக்கள் ஆறுதல் கூறினர்.

Hindusthan Samachar / ANANDHAN