எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி காரணமாக கிளாம்பாக்கத்திற்கு 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்திர
எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி காரணமாக கிளாம்பாக்கத்திற்கு 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை நகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையில் மார்ச் 20-ஆம் தேதி (நாளை) முதல் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு மாற்றம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதனை நகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு அறிவித்துள்ளது. இதன் விளைவாக, நகரப் போக்குவரத்துக் கழகம் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை செல்லும் தடம் எண் இ-18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை செல்லும் தடம் எண்.18-ஏ-ல் 28 பேருந்துகள் உட்பட மொத்தம் 44 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதோடு, ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் உட்பட மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து இயக்கப்பட உள்ளது.

அதிகப்படியான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும், முக்கியமான பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இந்த பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM