மக்கள் விரோத திமுகவுடன் இணைந்ததை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! - பாஜக விமர்சனம்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (பிப்ரவரி 19) திமுகவுடன் தேர்தல் கூட்டணியை தேமுதிக அமைத்துள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா
BJP criticism


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (பிப்ரவரி 19) திமுகவுடன் தேர்தல் கூட்டணியை தேமுதிக அமைத்துள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் ஏற்கெனவே சொன்னபடி தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறினார்.

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில்,

தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த்.

அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!

என்று பதிவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b