சொக்கநாதபுரம் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம்
சிவகங்கை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற
சொக்கநாதபுரம் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம்


சிவகங்கை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

பெரியமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன.

இந்த பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பந்தயத்தை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள், ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Hindusthan Samachar / vidya.b