Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்-சிறுமி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது சகோதரியின் மகளான 17வயது சிறுமியுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி மற்றும் காளி ஆட்டத்தை காண சென்றிருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் .
இதனால் அச்சமடைந்த சிறுமி உடனே தன் சித்தியிடம் வாலிபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை கூறி அழுதுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் சித்தி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் பிடிபட்ட நபரை
போலீசார் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மகளிர் போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆதம்பாக்கம் மாதவபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (28) என்பதும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
குறிப்பாக மயான கொள்ளை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யுவராஜ் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து யுவராஜ் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ