தர்மபுரி மாவட்டம் அரூரில் என்டிஏ கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் அடி தடி
தருமபுரி, 19 பிப்ரவரி (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் அரூர் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக மத்திய அரசின் நிதிகளை தமிழக அரசு மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தல
ஆர்ப்பாட்டம்


தருமபுரி, 19 பிப்ரவரி (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் அரூர் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக மத்திய

அரசின் நிதிகளை தமிழக அரசு மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாஜக மாவட்ட தலைவர் அமைப்பு

செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஆர் ஆர் முருகன் மற்றும் அதிமுக பாமக கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது மாவட்ட தலைவர்கள் சரவணன் பேசுகையில்,

மத்திய அரசின் நிதிகளை தமிழக அரசு மறை மாற்றம் செய்வதை கூட்டணி கட்சியில் இருக்கும் திருமாவளவன் கண்டிக்காதது ஏன் என்ற ரீதியில் பேசுகிறார்.

அப்போது அங்கு திருமாவளவன் குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு

தெரிவித்தனர்.

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென பாஜகவினரின் கூட்டத்தின் மீது செருப்பும்

வீசப்பட்டது.

இதனால் இது தரப்படியே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர்களை முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர் முருகன் கமல்ஹாசன் சமாதானம் படுத்தினார்.

ஆனால் அமைதி அடையாத விடுதலை சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாவட்ட தலைவர் சரவணன் காரில் ஏறி சென்று விட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்ற பாரதிய ஜனதா கட்சியினரின் கார்களை முற்றுகையிட்டு

மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த தரப்பினர் மாற்றி மாற்றி தாக்கி கொண்டனர்.

இதில் பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் தடுத்த போலீஸ்காரர்

ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் இரு தரப்பினரையும்

விலக்கி விட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam