Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.
இவர் கடையநல்லூர் பகுதியில் காய்கறிகள் வாங்கிவிட்டு கடையநல்லூர் காவல் நிலையம் வழியாக கிருஷ்ணாபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 67 கிராம் தாலி செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இந்த நிலையில், வலி தாங்க முடியாமல் துடித்த மாரியம்மாளை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற கடையநல்லூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாரியம்மாளிடம் தாலி செயினை பறித்த நபர் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த அருமன் ஹாலிக் (வயது 25) என்பதும், இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை இல்லாத காரணத்தினால் இது போன்ற செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்த நிலையில், அவரை கைது செய்த கடையநல்லூர் போலீசார் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருந்தபோதும், காவல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 67 கிராம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் கடையநல்லூர் நகரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN