Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 19 பிப்ரவரி (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை), விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் தேர்த் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 21-ஆம் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி பிப்ரவரி 21- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.
மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இந்தத் தேதியில் நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்தத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b