பராமரிப்பு பணிகள் காரணமாக மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (பிப்ரவரி 20), நாளை மறுநாள் (பிப்ரவரி 21) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முதல் காலை 4.45 மணி வரையில் (5 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இரு
பராமரிப்பு பணிகள் காரணமாக மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (பிப்ரவரி 20), நாளை மறுநாள் (பிப்ரவரி 21) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முதல் காலை 4.45 மணி வரையில் (5 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களிலும் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று, நாளை மறுநாள் மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 3.50 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில் கும்மி டிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b