பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை இடிக்க வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் - ஊர் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை ஈடுபட்டதால் பரபரப்பு
திருவாரூர், 19 பிப்ரவரி (ஹி.ச..) திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு பகுதியில் திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் பாலமுருகன் சித்ரா தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர்.கடந்த 60 வருட காலமாக இப்பகுதியில் பாலமுருகன் குடும்பம் க
பிரதமர் வீடு


திருவாரூர், 19 பிப்ரவரி (ஹி.ச..)

திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு பகுதியில் திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் பாலமுருகன் சித்ரா தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர்.கடந்த 60 வருட காலமாக இப்பகுதியில் பாலமுருகன் குடும்பம் குடும்பம் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலமுருகன் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் பாரத பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு வீடு கட்டப்பட்டுள்ளது.

இவர்களுக்கு துர்கா ஹேமா பிரியதர்ஷினி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.துர்கா கல்லூரி முதலாம் ஆண்டும் ஹேமா செவிலியருக்கும் பிரியதர்ஷினி பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாலமுருகன் வீடு கட்டி குடியிருந்து வரும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி வீட்டை இடிப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

மேலும் வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் மாணவிகளின் பள்ளி கல்லூரி புத்தகங்கள் என அனைத்தையும் அதிகாரிகள் வெளியில் எடுத்து வீசிவிட்டு வீட்டை இடிப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சித்ரா மற்றும் அவரது மூன்று பெண் குழந்தைகளும் கதறி அழுது அரசாங்க வீடான மோடி வீடு கட்டியிருக்கும்போது இந்த இடத்தை எப்படி இடிக்கலாம் என்று மன்றாடி அழுது காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஊர் மக்களும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று இடம் எதுவும் வழங்காமல் இந்த வீட்டை எப்படி இடிக்கலாம் பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் நடு ரோட்டிலாக நிற்பார்கள் எனவும் இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றால் இதில் எப்படி பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யலாம் அப்படி என்றால் அதிகாரிகள் மீதும் தவறு உள்ளது தானே என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam