Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவை செயற்கை நுண்ணறிவின் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு உன்னத இலக்குடன், '2026 செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாடு' பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.
புதுடெல்லியில் இன்று (19-ம் தேதி) பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
'எல்லோருக்கும் நலம், எல்லோருக்கும் ஆனந்தம்' என்ற உயரிய கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களை டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி இதயப்பூர்வமாக வரவேற்றார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பல முன்னணி தொழில்துறை ஜாம்பவான்கள் உரையாற்ற உள்ளனர்.
அதன் பிறகு, அனைவரும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சிக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் ஸ்டால்களைக் கண்டு களிக்க உள்ளனர்.
பிற்பகல் 12 மணியளவில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி கருத்துக்களைப் பரிமாற உள்ளனர்.
இறுதியாக, மாலை 5.30 மணிக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM