தேர்தல் கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்-திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்தை அமைச்சர்கள் எ.வ வேலு, நேரு ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இது கு
p


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்தை அமைச்சர்கள் எ.வ வேலு, நேரு ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இது குறித்து, பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது,

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

2016-ம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைவதாக இருந்தது.

ஆனால், 10 ஆண்டுகள் கழித்து அது நடந்திருக்கிறது

இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2005 -ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தனித்து போட்டி, அதிமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என்று தேர்தல்களை சந்தித்த தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்தது.

கட்சியின் 20 ஆண்டுகால வரலாற்றில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J