அடுத்தடுத்து தேர்தல் பரப்புரைக்காக அடுத்த மாதம் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தல்; அடுத்தடுத்து தேர்தல் பரப்புரைக்காக அடுத்த மாதம் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வரவுள்ளதாக பா.ஜ.க. தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந
Pm


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தல்; அடுத்தடுத்து தேர்தல் பரப்புரைக்காக அடுத்த மாதம் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வரவுள்ளதாக பா.ஜ.க. தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் முதல் வாரத்தில் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதேபோன்று 6-ம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக கூட்டணிக்காக வாக்குகள் கேட்க இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக வருகிற 11-ம் தேதி திருச்சி வரவுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் பொதுக்கூட்டம் நடைபெறும் வகையில் இடத்தேர்வு நடைபெற உள்ளது.

அதற்காக பாஜக சார்பில் ஏற்பாடுகளை செய்ய மாநில தலைமை உத்தரவிட்ட நிலையில் பிரதமரின் அடுத்தடுத்து தமிழக வருகை அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ