Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 19 பிப்ரவரி (ஹி.ச.)
இலங்கைக்கு அருகே மேம்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்து இலங்கை கடற்படை அத்துமீறி வருகிறது.
காலங்காலமாக நடந்து வரும் அத்துமீறலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு கட்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், 12 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடற்படையினரால் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது விசாரணை நடத்திய இலங்கை நீதிமன்ற நீதிபதி, வருகின்ற நான்காம் தேதி வரை தமிழக மீனவர்களுக்கு சிறைக்காவல் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் போலீசார் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam