Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து சிறைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளையும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும் நான்கு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து இருப்பது மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN