Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச)
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடைபிடிக்கப்படும்.
இந்த நோன்பு மற்றும் பண்டிகை ஆகியவை பிறையை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன.
நோன்பை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.
பின்னர், தினமும் இஃப்தார் விருந்துடன் மாலை நோன்பை நிறைவு செய்வார்கள்.
நோன்பு காலம் முடிந்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு
தொடங்கும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்திருந்த நிலையில் சென்னை அமைந்தகரை உள்ள ஜாமியா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் இன்று அதிகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு.
ஆகவே அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பிருத்தலை பெரிய கடமையாக கருதி இஸ்லாமியர்கள் அனைவரும் நாளை முதல் கடைபிடிப்பார்கள்.
செல்வம் படைத்தவர்களும் பசி மற்றும் பட்டினி குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
உணவு கிடைக்காதவர்களின் நிலையை உணர வேண்டும். என்பதற்காகவே இந்த நோன்பு இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 நாட்களும் 5 வேலை தொழுகைத்தவிர சிறப்புத் தொழுகையாக தராவிஹ் (இரவு சிறப்பு) தொழுகை நடத்தப்படும்.
அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே சஹர் என அழைக்கப்படும் உணவை உண்டபின் நோன்பு வைக்க துவங்குவார்கள்.
அது முதல் மாலை 6-30 மணி மஹ்ரிப் தொழுகை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருப்பார்கள்.
பின்னர் நோன்பை முடித்து உணவருந்தி தொழுகையில் ஈடுபடுவார்கள்.
30 நாட்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.
Hindusthan Samachar / P YUVARAJ