தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாத ஐயர் - டிடிவி தினகரன் புகழாரம்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச) தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செய்துள்ளார். டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவத
TTV Dhinakaran pays tribute


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச)

தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செய்துள்ளார்.

டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சங்கநூல்கள் தொடங்கி திருவிளையாடற் புராணம் வரை பல்வேறு ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து, நூலாக வெளியிட்டதோடு, தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b