திமுக கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது ஆழ்ந்த  அனுதாபங்கள் - தமிழிசை சௌந்தர்ராஜன்
வேலூர், 19 பிப்ரவரி (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தலைவருமான டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை பொறு
தமிழிசை


வேலூர், 19 பிப்ரவரி (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில்

கலந்து கொண்ட முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தலைவருமான டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னை பொறுத்தவரை மூழ்கிற கப்பலில் கேப்டனின் தொண்டர்களை அதில் அமர வைத்திருப்பார்கள் இது எனக்கு மன வேதனை.

விஜயகாந்த் அவர்கள் எந்த அளவிற்கு அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு, தன் ரசிகர்களுக்கு

மக்களுக்கு பாதுகாப்பு என பேசிவந்தால். அவருடைய கட்சி இந்த முடிவை

எடுத்திருப்பது உண்மையிலே வருந்தத்தக்கதே.

தொண்டர்களின் விருப்பமாக சொல்கிறார் தொண்டர்கள் அப்படி விரும்பினார்களா என

தெரியாது. நிச்சயமாக தமிழக அரசியலில் கேப்டன் கேப்டன் என தலை நிமிர்ந்து

சொல்லிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூழ்குற கப்பலில் கேப்டனா போனா எப்படி

இருக்குமோ அப்படி உள்ளது இதில் தமிழக முதலமைச்சர் இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய சவால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். பிரேமலதா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி மிக மிக வலிமையாக உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

மாநில உரிமைக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வேண்டி உள்ளது என முதலமைச்சர் பேசியது குறித்து கேட்டதற்கு,

27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை, ஓர் ஆண்டு ஆகிறது.

கிராமங்களுக்கான அதிகார பகிர்வை கொடுக்காமல் அவர்கள் எப்படி மாநில உரிமைகள்

பற்றி பேசுகிறார்கள்.

இன்னும்சொல்லப்போனால் காங்கிரஸ் கூட இருந்து கொண்டு அவர்கள் இதை

பேசுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து.

மனித உரிமையின் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் அஇஅதிமுக என பெயர் மாற்ற காரணமே காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநில கட்சிகளை ஒழிக்க வேண்டும் என

நினைத்ததால் தான் பெயரை மாற்றியவர் என படித்தேன். மாநிலக் கட்சிகளே இருக்கக்

கூடாது என்ற கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு, அடைந்தால் தனி நாடு இல்லையேல் சுடுகாடு என பேசியவர்கள் சட்டம் பாயும் என்ற உடனே அடங்கி விட்டார்கள். ஆனால்

இன்று மாநில சுயாட்சியை தோல்வி பயத்தினால் கையில் எடுத்திருக்கிறார்கள்.

தேமுதிகவின் இந்த முடிவு விஜயகாந்தின் எண்ணத்திற்கு எதிரானது என நான் நினைக்கிறேன். பிரேமலதா அவர்களையும் நான் ஒன்றும் சொல்லவில்லை நான் ஒரு

அரசியல்வாதி என்ற முறையில் இதை சொல்கிறேன்.

இடையில் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை பாஜாக ஈடுபட்டதா என்ற கேள்விக்கு, அப்படி

ஒன்றும் இல்லை என பதில் அளித்தார். தேமுதிக இணைந்தது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு

மிகப்பெரிய அடி என முதலமைச்சர் கூறுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை நாங்கள்

பலமாக தான் உள்ளோம்.

தமிழக அரசு 5000 வழங்கியது குறித்து கேட்டதற்கு, பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது

கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காக தான், எங்கள் நலனுக்காக அல்ல.

தவெக தலைவர் விஜய் வேலூர் வருகை தர இருப்பது குறித்து கேட்டதற்கு,

அவர் வரட்டும் ஒன்று பிரச்சனை இல்லை.

பாதுகாப்பா இருக்கணும் எந்த உயிரும் போகக்கூடாது தமிழக வெற்றி கழக

சகோதரர்களுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் தண்ணி உள்ளதா?

தன்னார்வலர்களை போட்டு முறையான கூட்டம் ஒருங்கிணைக்க வேண்டும். நாங்களும்

கட்சிக் கூட்டங்களை நடத்துகிறோம் ஆனால் ஒரு கட்டமைப்போடு அதை நடத்துகிறோம்.

தவெக கூட்டத்தில் இருக்கை, தண்ணீர் இல்லாததை நான் பார்த்துள்ளேன். எந்த

அபாயமும் இல்லாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். தம்பி விஜய் அவர்கள் வேலூருக்கு

வரட்டும் வெயிலூருக்கு போகட்டும் ஆனால் எந்த உயிரும் பாதிக்க கூடாது என்பது எனது அடி மனது வருத்தமாக உள்ளது. தவெக உயிர் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்

என நான் கேட்டுக்கொள்கிறேன்.

வேலூருக்கு பிரதமர் வருகிறார் அது மிகப்பெரிய நன்மையை நமக்கு ஏற்படுத்தும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என சொல்வதை நாங்கள்

ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் சிறுபான்மை சகோதரர்களும் எங்களோடு தான்

இருக்கிறார்கள். வேலூர் வரும் பாரத பிரதமருக்கு மிகப்பெரிய வரவேற்பு தருவோம்.

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் பொதுமக்கள் ஆதரவு நமக்கு அதிகமாக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு,

அவர் வேற என்ன சொல்லுவார், அதை சொல்வதற்கு தானே அவரை உட்கார வைத்துள்ளார்கள்.

அவர் என்ன உழைத்தார என்ன பண்ணார் பேச தான் உட்கார வைத்திருக்கிறார்கள் அவர் இப்படியே துணை முதல்வராகவே இருந்திட வேண்டியதுதான். நான் அழுத்தமாக சொல்கிறேன்

தமிழக மக்கள் மிக மிக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அனைத்து விலைவாசியும் ஏரி உள்ளது. கடனை வாங்கி மக்களுக்கு திட்டத்தை கொடுப்பது நல்ல நிர்வாகம் அல்ல. அதே சமயம் நிதி நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும்.

கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கேட்டதற்கு அதை பேச வேண்டிய இடத்தில் பேசுவார்கள் என கூறினார். சீட்டு எத்தனை என்று மைக் முன்னாடி பேசக்கூடாது.

பண்ருட்டி ராமச்சந்திரன் புதியதாக கட்சி துவங்கி உள்ளது குறித்து கேட்டதற்கு, புது புது கட்சிகள் வரட்டும் பார்க்கட்டும்.

திமுக காங்கிரஸ் இடையே நீடித்து வரும் குழப்பம் குறித்து கேட்டதற்கு,

திமுக கூட்டணியில் ஒரு கட்சி வந்து விட்டதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய இழப்பு என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும்

இல்லை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் இருப்பார்களா போவாங்களா? சூரியனிடம் வருவார்களா? அல்லது விசிலிடம் போவார்களா? என தெரியவில்லை.

அவர்களைப் பற்றி நாங்கள் பேசவில்லை நாங்கள் பலமாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் யார் சேர்கிறார்கள்

யார் விலகுகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

நாங்கள் வெற்றி பெறப் போகிறோம் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam