டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்றுநர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு 2026 அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பிப்ரவரி 18ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம் தொடங்குகிறது. பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தகுதிப் பெ
Training with instructors


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு 2026 அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பிப்ரவரி 18ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம் தொடங்குகிறது.

பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்படவுள்ளது.

2 தாள்கள் கொண்டு இத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது.டெட் தேர்வு 2 தாள்கள் கொண்டு நடத்தப்படும். முதல் தாளை இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிகரான பதவியில் உள்ளவர்கள் எழுதுவார்கள்.

இரண்டாம் தாளை பிடி உதவியாளர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர நிகரான பதவிகளில் உள்ளவர்கள் எழுதுவார்கள். இத்தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் (MCQs) நடைபெறும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இந்நிலையில் டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவு அளித்துள்ளது.

மாவட்ட கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயற்சி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b