Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.
எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b