Enter your Email Address to subscribe to our newsletters

திருக்கோஷ்டியூர், 19 பிப்ரவரி (ஹி.ச.)
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இதனையொட்டி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறாா்.
இதன் காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் வட்டார அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அவரவர் கடமைகள் குறித்து வட்டார அதிகாரி மாணிக்கவாசகம் வழிகாட்டினார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வகுமார் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர் வேத வள்ளி, கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேஷ், பட்டாச்சாரியார்கள், காவலர்கள், போக்குவரத்து, மின்சார வாரியம், தீயணைப்பு படை, சுகாதாரத் துறை, பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM