Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கட்டணமில்லா பேரவையல் பயணம் செய்த பெண்களைச நிறுத்தத்திற்கு அரை கிலோமீட்டர் முன்பாக இறக்கிவிட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
விடியா திமுக அரசில் மகளிருக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால் மகளிர் பயணம் செய்யும் கட்டணமில்லா விடியல் பேருந்தில் மரியாதையும் இல்லை.
காங்கேயத்தில் மகளிர் விடியல் பயணம் என்று வெற்று விளம்பரம் செய்யும் மக்கள் விரோத திமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறையில் பயணம் செய்த மகளிரை உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல் அரை கிலோ மீட்டர்தானே நடந்து போங்க என்றும், உரிய பயணச் சீட்டை வழங்காமல் அபராதம் கட்டுங்க என்றும் போக்குவரத்துறை ஊழியர்கள் கூறியதாக அப்பெண்கள் கூறுவது பெண்களை இந்த அரசு எந்த அளவிற்கு கீழ்த்தரமாக நடத்துகிறது என்பதற்கு சாட்சி. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று கூறிவிட்டு ஓசி பயணம் என்று அசிங்கப்படுத்துவதும், உரிய நிறுத்தங்களில் இறக்கி விடாமல் அலைக்கழித்து மரியாதைக்குறைவாக நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதான் உங்கள் விடியல் பயணமா முதல்வர் அவர்களே..?
பெண்களின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கும் இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு இந்தத் தேர்தலில் பெண்களாகிய நாம் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவோம்.
சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ