ஒரு வருடமாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை முயற்சி!
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையை‌ அடுத்த தாழம்பூர் மேல் கோட்டையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் பிஎஸ்எப் வீரர் ராம்கி(37). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2012
தற்கொலை


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையை‌ அடுத்த தாழம்பூர் மேல் கோட்டையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் பிஎஸ்எப் வீரர் ராம்கி(37).

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2012 ஆண்டு மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்து இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் (பெட்டாலியன்) பணியாற்றி வந்தார்.‌

பின்னர் ஒரு வருடத்திற்கு முன்பு கொல்கத்தாவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ராம்கி பணிக்கு செல்லாமல் (விட்டோடி) ஒரு‌ வருடமாக வீட்டிலேயே இருந்து வந்ததுள்ளார்.

இதனால் போதிய வருமானம் இல்லாததால் ராம்கி உறவினர், நண்பர்கள் என பலரிடம் கடன்‌ வாங்கியதாக கூறப்படுகிறது.. மேலும் மேலும் கடன் சுமை அதிகரித்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ராம்கி நேற்று மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்ற பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பூங்கா சென்று விட்டு வீடு திரும்பிய மனைவி பிள்ளைகள், ராம்கி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam