Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 20 பிப்ரவரி (ஹி.ச.)
ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை, இந்த மாதம் 28-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பேருந்து நிலையத்தை புதுப்பித்து, சுமார் ரூ.4.35 கோடி செலவில் புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியிருந்தது.
இதற்கான வேலைகளை ஆரம்பிக்க உள்ளூர் நிர்வாகம் முனைப்பு காட்டியது.
ஆனால், பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக கடைகள் நடத்தி வரும் வணிகர்கள், மாற்று இடம் தராமலே கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் காரணமாக அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொதுநலன் கருதி புதிய பேருந்து நிலையம் கட்டுவது இன்றியமையாதது. ஆகையால், தற்போது இயங்கி வரும் கடைகளை 28-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஆலங்குளம் பேருந்து நிலையம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM