Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
கலைப்புலி எஸ்.தானு இயக்கத்தில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் அரசன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து அரசன் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த திரைப்டத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ