மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமா..? வேண்டாமா..? காரசார விவாதம்
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை மாநகராட்சியின் 2026 - 2027 ஆண்டிற்கான பட்ஜெட் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது அதன் மீதான விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. விவாதித்தின்போது பேசிய, மதிமுக உறுப்பினர் ஜீவன் இந்த மண்டபத்தில் இரு
Mayor Priya


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியின் 2026 - 2027 ஆண்டிற்கான பட்ஜெட் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது அதன் மீதான விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

விவாதித்தின்போது பேசிய, மதிமுக உறுப்பினர் ஜீவன் இந்த மண்டபத்தில் இருந்து இரண்டு மூன்று பேர் சட்டமன்ற உறுப்பினராக செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றும் ஆனால் மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றார்,

மேலும் ஒன்றரை கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஏர் பிரியா வரவிருக்கும் மாநகராட்சி பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என பேசினார்.

இதற்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் ஒருவர் அவர் தமிழகத்தின் பிரதிநிதியாக (அமைச்சராக) வருவார் என்று கூறியதால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா இந்த விவாதம் இருக்கட்டும், தற்போது பட்ஜெட் மீதான விவாதத்திற்கு வாருங்கள் என தனக்கான பாணியில் சிரித்துக் கொண்டே கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN