ஏரியை ஆக்கிரமத்ததாக புகார் - 10 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்!
நாமக்கல், 20 பிப்ரவரி (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மேல்முகம் ஊராட்சியில் அத்தப்பம்பட்டி சிக்கிடிச்சி பாளையம் ஏரியில் கடந்த நான்காண்டுகளாக தனி நபர்கள் சுமார் ஐந்து பேர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அரசுக்கு தெரியாமல் தன்ன
ஏரி


நாமக்கல், 20 பிப்ரவரி (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மேல்முகம் ஊராட்சியில்

அத்தப்பம்பட்டி சிக்கிடிச்சி பாளையம் ஏரியில் கடந்த நான்காண்டுகளாக தனி

நபர்கள் சுமார் ஐந்து பேர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அரசுக்கு தெரியாமல் தன்னிச்சையாக ஏரியிலிருந்து மீன்களை எடுத்து விற்பனை செய்தது வந்ததாகவும்

குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த ஏரியானது சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது அரசு இது நேரடியாக ஏலம்

விட்டதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட குழு தன்னிச்சையாக ஏரியை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம் சாட்டி சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாததால் விரத்தில் இருந்த அந்த 10

குடும்பத்தினர் தொடர்ந்து அந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது ஊர் பொதுமக்களிடம் இந்த ஏரி

சம்பந்தமாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

அவர்களை கிராமத்தில்

இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள

முடியாத சூழ்நிலையில் இவர்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் தன்ராஜ்

அவர்களின் தாயார் இறப்பில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையில்

இவர்களை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு

கட்டுப்பாட்டில் உள்ளது நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று தள்ளி வைத்ததாக கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்கள் பேட்டியில் கூறுகையில்,

ஏரியில் உள்ள ஆக்கிரமங்களை உடனடியாக அகற்ற

வேண்டும் தனிநபர்களுக்கு அரசு துணை போக கூடாது என்று தெரிவித்தனர்.

இந்த

நிலையில் அந்த ஏரியை பொதுமக்கள் அனைவரும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஏரி சம்மந்தமாக கேள்வி எழுப்பிய தங்கள் 10 குடும்பங்களை ஒதுக்கி

வைத்துள்ள விவகாரம் சம்பந்தமாக அரசு உடனடி கவனம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு

காண வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam