Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 பிப்ரவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில்,
இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற் கொண்டு,
வீடியோவை பதிவிட்ட கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையை சேர்ந்த செல்வக்குமார்(25) என்பவரை கைது செய்து,
வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J