Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
தேமுதிக சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி விருப்பம் மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் விருப்பமான விருப்பமான அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகின்றனர்.
இன்று துவக்கி நாளை மறுநாள் வரை நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இரண்டு கட்டங்களாக நடைபெறும் நேர்காணலில் இன்று
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலை 10 மணி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
அதே போல் இரண்டாம் கட்டமாக இன்று மதியம் 3 மணிக்கு மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
இன்று ஒரே நாளில் 11 மாவட்டங்களுக்கு நேர்காணலானது நடைபெறும் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் முன்னேற்றக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் எத்தனை தொகுதி கேட்கலாம் என்பது தொடர்பாகவும் யார் யாரை நிற்க வைப்பது என்பது தொடர்பாக முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ