திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகம்
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச) திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்க
Anna


Hs


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் தொடங்குகிறது.

இன்று முதல் வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

பொது தொகுதியில் போட்டியிட ரூ.25 ஆயிரமும், தனி தொகுதி மற்றும் மகளிர் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விருப்பம் தெரிவித்த தொகுதி கூட்டணியில் உள்ள கட்சிக்கு வழங்கப்படும் சூழலில் விருப்ப மனு சமர்ப்பிக்க செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

விருப்ப மனு விநியோகம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள்ளாக 500 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட பூர்த்தி செய்யப்பட்ட முதல் விண்ணப்பத்தை திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு வழங்கினார்.

முதலமைச்சர் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், துணை முதலமைச்சர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு வழங்கினார்.

ஏராளமான திமுகவினர் விருப்பம் மனுவை வாங்குவதற்காக வரிசையில் காத்துக் கொண்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்

Hindusthan Samachar / P YUVARAJ