Enter your Email Address to subscribe to our newsletters

முசாபர்நகர், 20 பிப்ரவரி (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மரணமடைந்த ரிது அவரது தந்தை சஞ்சய் காவல் நிலையத்தில் அளித்தார்.
அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது,,
ரிது ஜூலை 3, 2025 அன்று வினீத்தை மணந்தார், மேலும் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டார்.
மாமியார் அவரை கழுத்தை நெரித்து கொன்று, தற்கொலை செய்து கொண்டது போல் காட்ட அவரது உடல் கூரையில் தொங்க விடப்பட்டார் என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சய் அளித்த புகாரின்படி,
பெண்ணின் கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது,
மீராபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லா காபெட் கிராமத்தில் நேற்று மாலை வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது மாமியார் வீட்டில் கூரையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் தற்கொலை என்று சித்தரிக்க கூரையில் தொங்கவிடப்பட்டுள்ளது.
அவரது மாமியார் குடும்பத்தினரின் வரதட்சணை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததால் கொல்லப்பட்டார்.
மரணமடைந்த ரிதுவின் கணவர் வினீத் மற்றும் அவரது மாமனார் பிட்டு உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது,உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
என வட்ட அதிகாரி (ஜன்சத்) ரூபாலி ராவ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM