Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 பிப்ரவரி (ஹி.ச.)
சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் காங்டாக் அருகே இன்று அதிகாலை சுமார் 2.37 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும், இது 27.39 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 88.53 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.49 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அத்துடன், இது 27.09 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 92.09 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதலில் கண்டறியப்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
Hindusthan Samachar / JANAKI RAM