குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைகளை விரட்டிய வனத்துறையினர்
கோவை, 20 பிப்ரவரி (ஹி.ச.) ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை கரடி சிறுத்தை மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ள நிலையில் தற்பொழுது மலைப்பொழிவு இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் ஆழியார் அ
காட்டு யானை


கோவை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை கரடி சிறுத்தை மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ள நிலையில் தற்பொழுது மலைப்பொழிவு இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் ஆழியார் அணை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில்

இருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி ஆழியார் அணைப்பகுதியில் தண்ணீர் அருந்திவிட்டு வழி தெரியாமல் ஆழியார் அறிவு திருக்கோவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்தது.

இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் இருந்து ஆழியார் அணைப்பகுதி வழியாக சத்தம் போட்டு விரட்டினர்.

வனத்துறையினர் சொல் பேச்சு கேட்டு யானைகள் வேகமாக ஆழியார் அணைப்பகுதியில் இருந்து பொள்ளாச்சி வால்பாறை சாலை வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால்

இப்பகுதியில் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam