புனித ரமலான் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச) ரமலான் நோன்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ரமலான் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Eps


W


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)

ரமலான் நோன்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ரமலான் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

புனித ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள இந்த புனித நாட்களில் , இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ஈகையின் வழியில் நம்மை நடத்தும் இவ்வருள்மிகு காலத்தில், நோன்பு நோற்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டு, உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் பெருகட்டும்.

ஈகை, பரிவு, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த மனிதநேயப் பண்புகள் நம் சமூகத்தில் மேலும் வேரூன்றி வளர இந்த ரமலான் மாதம் வழிவகுக்கட்டும்.

Hindusthan Samachar / P YUVARAJ