மகளிர் உரிமை தொகையை யாரேனும் நிறுத்த முயற்சித்தால் தமிழகமே கொந்தளிக்கும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) 2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்
Finance Minister Thangam Thennarasu


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது.

அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை பின்வருமாறு:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், மாவட்ட தோறும் தோழிவிடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. மகளிர் உரிமை தொகையை யாரேனும் நிறுத்த முயற்சித்தால் தமிழகமே கொந்தளிக்கும். அக்கொந்தளிப்பு இருக்கும் வரை ஸ்டாலின் தான் முதல்வர்.

சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பஸ் தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மகளிர நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி. கோவிட் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தது திராவிட மாடல் ஆட்சி ஐந்து ஆண்டுகளில் ஜாதி, மத மோதல்கள் எதுவும் இல்லாமல் தமிழகம் அமைதியாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழகம் உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழகம் போட்டியிடுகிறது மற்ற மாநிலங்களோடு அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் நாம் போட்டி போடுகிறோம்.

பெயர் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர் பெயர்களை சூட்டுவதிலும் பெயரை மாற்றுவதிலும் தமிழக அரசு உயர்ந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது. நாடே வியக்கும் வண்ணம் கீழடி பொருநை அருங்காட்சியகங்களை முதல்வர் ஸ்டாலின். தமிழக பண்பாட்டின் காவலர் முதல்வர் ஸ்டாலின் என்பது என்றும் வரலாற்றில் மறக்கப்படாது

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசு இலக்கு, மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம்.

இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.

Hindusthan Samachar / vidya.b