Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 20 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு
மேலாக 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைவிக்கக்
கூடிய காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினசரி வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை பயன்படுத்தாமல் உழவர்
சந்தைக்கு செல்லக்கூடிய சாலையில் நடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்
காய்கறி வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் காய்கறி
மார்க்கெட்டில் கொட்டப்படும் குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும்
குப்பைகளை எடுக்காமல் செல்வதால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு
அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனால் வியாபாரிகள் கொண்டு வந்த காய்கறிகளை
சாலையில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நூதன போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் தங்களுக்கு
நிரந்தர தீர்வு காண வேண்டும் வியாபாரம் பாதிக்ககூடாது என கூறி வாக்குவாதத்தில்
ஈடுபட்ட போது நகராட்சி அலுவலர்கள் அலட்சியமான பதில் அளித்ததால், ஆத்திரமடைந்த
விவசாயிகள் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காய்கறி மார்க்கெட் வழியாக செல்லக்கூடிய சாலைகள் போக்குவரத்து
பாதிக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக்கூடிய
பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam