கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தை சட்ட ரீதியில் அணுகுவோம் - ஆர்.எஸ். பாரதி
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் க
RS Bharathi


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி,

அமலக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மூத்த அமைச்சர் கட்சியின் முதன்மை செயலாளர் என்று எல்லாம் பாராமல் சட்டப்படியான நடவடிக்கைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கே.என்.நேரு மீது ஜெயலலிதா பல வழக்குகளை போட்டுள்ளார் அவை அனைத்தையும் வென்று காட்டியவர். இப்போது போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெருவார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகாக அமலக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி போடப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?.. வெற்று வழக்குகளாக போட்டி பொது மக்கள் இடையே அந்தஸ்தை குறைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். இதைவிட கடுமையான வழக்குகளை எல்லாம் தாண்டி வென்ற கட்சிதான் திமுக, சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்வோம்.

தேர்தல் நேரத்தில் 41 தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டள்ள அமைச்சர் நேரு வெற்றி பெற வைத்துவிடுவார் என்ற காரணத்திற்காக

பொறாமையில் வைத்தெரிச்சலில் பாஜக இப்படி செய்து வருகிறது.

நேருவை துன்புறுத்த துன்புறுத்த இன்னும் வீரியத்துடன் செயல்படுவார்

ஏற்கனவே தமிழக அரசு சார்பாக தெளிவான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN