தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெற வேண்டியது தாமதமாக நடந்தாலும் மகிழ்ச்சி -அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் நுட்பஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத
m


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும்

பள்ளிகளில் முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் நுட்பஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது,

இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் உள்வாங்குவது மிக முக்கியமானது.

அந்த வகையில் 25000 மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

கணினி வழி திறனறிவு தேர்வு நடத்தி பள்ளிகளில் மாணவர்களை கண்டறிந்து திறன் மேம்படுத்தி வருகிறோம். குறைந்த கற்றல் திறன் கொண்ட 40% மாணவர்களை திறன் மேம்படுத்தி உள்ளோம்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்து இணையதள டூல்ஸ் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

இன்று சட்டமன்ற இறுதி நாள் அல்ல நிறைவான நாளாக பார்க்கிறோம். அனைத்து உறுப்பினர்களும் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் முறையாக பதில் அளித்தனர்.

கலைஞர் மீது மரியாதை வைத்திருந்தவர் கேப்டன் தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெறவேண்டியது தாமதமாக நடந்தாலும் மகிழ்ச்சி.

எதிர் கட்சிகள் எங்களை என்ன வெற்றி கூட்டணி எனவா? பாராட்ட போகிறார்கள் அனைத்து கூட்டணிகளுக்கும் விமர்சனம் வரத்தான் செய்யும் என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி ஐஏஎஸ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J