Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) பதிலளித்துப் பேசினார்கள்.
இருப்பினும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். அதே சமயம் அவை நடவடிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முழுமையாக பங்கேற்றார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசியுள்ளார்.
அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பிறகு முதல்வர் அவைக்குள் வரும் போது அவரை பார்ப்பதற்கு வாயில் அருகே ஓ. பன்னீர்செல்வம் காத்திருந்து முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார்.
பொதுவாக மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b