நெல்லை அருகே 17 வயது கர்ப்பிணி தற்கொலை - குழந்தை திருமணத்தால்  நேர்ந்த சோகம்
நெல்லை, 20 பிப்ரவரி (ஹி.ச.) நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியை அடுத்த தடியம்பட்டியில் வனராஜ் என்பவர் வசிக்கிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிறுமிக்கு 15 வயதிலேயே குழந்தை திருமணம
தற்கொலை


நெல்லை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியை அடுத்த தடியம்பட்டியில் வனராஜ் என்பவர்

வசிக்கிறார்.

இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சிறுமிக்கு 15 வயதிலேயே குழந்தை திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

வனராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவார். இதனால் கோபம்

அடையும் சிறுமி தனது தாய் வீட்டுக்கு செல்வார். பின்னர் அவரை சமாதானம் செய்து

வனராஜ் குடும்பத்தினர் அழைத்து வருவார்கள்.

இந் நிலையில் இரவு வனராஜ் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டார்.

இதனை சிறுமி போன் மூலம் தனது

தாயிடம் தெரிவித்தார். சாதாரண சண்டை தானே என்று தாய் மகளை சமாதானம் செய்தார்.

ஆனால் மறுநாள் அதிகாலை சிறுமி தூக்கு மாட்டி இறந்து விட்டதாக அவரது தாயாருக்கு

தகவல் வந்தது.

அவர் பதறிப்போய் மகளின் வீட்டுக்கு சென்றார். அங்கு மகள் கட்டிலில் பிணமாக கிடந்ததை பார்த்து அழுதார்.

இரவு தூங்க சென்ற

சிறுமி அதிகாலை வீட்டின் தொட்டில் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கினார்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த வனராஜ் அவரை கீழே இறக்கி

வைத்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினர்.

இது குறித்து சிறுமியின் தாயார் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் எஸ்ஐ லூக்அசன் வழக்கு பதிவு செய்தார்.

இளம் வயதில்

நடந்த திருமணமே இந்த தற்கொலைக்கு காரணம் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து ஊரக போலீஸ் டிஎஸ்பி ரகுபதிராஜா விசாரணை செய்து வருகிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam