Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 பிப்ரவரி (ஹி.ச.)
குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு,அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உதயமான இந்த இனிய நாளில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களின் மாநில நாளைச் சிறப்பிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு மாநில நாள் வாழ்த்துக்கள்!
இந்த இரண்டு மாநிலங்களும் இயற்கை எழில் கொஞ்சும் அழகால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ரம்மியமான மாநிலங்கள். மேலும், சிறந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் தொழில் வல்லுநர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய பூமியாகும்.
இந்த இரண்டு மாநிலங்களும் தேசிய வளர்ச்சிக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு மாநில மக்களும் நிலையான வளர்ச்சியையும், தொடர்ந்து வளமான பாதையில் முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM